இந்தியா, சீனா மற்றும் பங்களாதேஷால், இலங்கைக்கு ஆபத்து
வட இந்தியப் பகுதிகளில் இருந்து, இலங்கைக்குள் தள்ளப்படும் மாசுபட்ட வளி, எதிர்வரும் மாதங்களில் இலங்கையின் வளி(காற்று) தரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
வருடாந்தம் நவம்பர் முதல் மார்ச் வரை, மாசுபட்ட வளி நாட்டிற்குள் பாய்கிறது (எல்லை தாண்டிய காற்று மாசுபாடு). முக்கியமாக இந்தியாவின் வடக்குப் பகுதிகளிலிருந்தும், பங்களாதேஷ் மற்றும் சீனாவிலிருந்தும். கடந்த இரண்டு ஆண்டுகளாக, தொற்றுநோய் முடக்கல் காரணமாக வளி மாசு அளவு குறைவாக இருந்தது.
இருப்பினும், இந்த ஆண்டு வளி மாசுபாடு முழு அளவில் எதிர்பார்க்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் வளி; தரப் பிரிவின் விஞ்ஞானி எச்.டி.எஸ். பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
இந்திய நகரங்களில், குறிப்பாக புதுடில்லியில், வளியின்; தரக் குறியீடு நிலை அல்லது துகள்கள், இந்த வாரம் 400 முதல் 565 வரை - அபாய நிலையை எட்டியுள்ளது.
கொழும்பில், தற்போது, எயார் க்வாலிட்டி இன்டெக்ஸ் என்ற வளி தரம் சுட்டெண்- 72
என்ற மிதமான மட்டத்தில் உள்ளது. அதாவது காற்றின் தரம் மோசமாக இல்லை,
எனினும் அடுத்த சில மாதங்களில் நாட்டின் வளி மாசுபாட்டின் 50 சதவீதத்திற்கும்
அதிகமான வளி மாசுபாடு, எல்லை தாண்டிய வளி மாசுபாடாக இருக்கும் என்று பிரேமசிறி
கூறியுள்ளார்.