கொலம்பியா சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 51 கைதிகள் பலி (Video)
கொலம்பியா சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 51 கைதிகள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள துலுவா நகரில் பெரிய சிறைச்சாலை உள்ளது.
இந்த சிறையில் உள்ள கைதிகள் நேற்று முன்தினம் திடீர் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தின்போது சிறையில் தீப்பற்றியது.
மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண் இமைக்கும் நேரத்தில் சிறை முழுவதிலும் பரவியது.
இதில் தீயில் சிக்கி 51 கைதிகள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பலத்த தீக்காயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan