புறப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளான விமானம்.. 80 இராணுவ வீரர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில்!
கொலம்பியாவின் தெற்கு பகுதியில் இன்று ஏற்பட்ட இராணுவ போக்குவரத்து விமான விபத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட படையினர் உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
இரண்டு படைப்பிரிவுகளை ஏற்றிச் சென்ற C-130 Hercules வகை விமானம், எக்குவடோர் எல்லைக்கு அருகிலுள்ள Puerto Leguizamo பகுதியில் புறப்படும் நேரத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என கொலம்பிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெளியான காணொளி..
அந்நாட்டின் அரச ஒளிபரப்புச் சேவை வெளியிட்ட காட்சிகளில், காடுகளால் சூழப்பட்ட பகுதியில் விமானத்தின் சேதமடைந்த பகுதி தீப்பற்றி எரிவது காணப்படுகிறது.
#Military #plane #crash reported in #Colombia,#Aircraft goes down near #Puerto #Leguízamo with around 100 onboard,Wreckage seen #burning in dense #jungle area,Crash video surfaces on social media. pic.twitter.com/Ez3jK58ahu
— RITESH YADAV (@ritesh8989) March 23, 2026
இந்த வகை விமானங்கள் பொதுவாக சுமார் 100 படையினரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாகும். “இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு ஏற்கனவே சென்றுள்ளனர்.
இருப்பினும், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் விபத்து காரணமும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை,” என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
இது நாட்டிற்கு மிகுந்த துயரமான நிகழ்வாகும். எங்கள் பிரார்த்தனைகள் சில நிம்மதியை அளிக்கட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பல தசாப்தங்களில் உலகம் கண்டிராத மிக மோசமான நெருக்கடி..! தீவிரமடைந்தால் எந்த நாடும் தப்ப முடியாதென எச்சரிக்கை
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam