யாழின் முக்கிய கல்லூரிக்கு புலம்பெயர் தமிழர்களிடமிருந்து குவியும் பேராதரவு (Video)
யாழ்ப்பாணம் தொழில்நுட்ப கல்லூரியின் வளப் பற்றாக்குறையை தீர்க்க புலம் பெயர் தமிழர்கள் மற்றும் கல்லூரியின் பழைய மாணவர்கள் உதவிகளை வழங்கி வருகின்ற போதிலும் தொடர்ந்தும் பல்வேறு தேவைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதனால் எதிர்கால மாணவ சமூகத்தின் நலன்களை கருத்திற் கொண்டு உதவிகளை வழங்குமாறு பிரபல தொழிலதிபரும், சமூக செயற்பாட்டாளரும் ஐபிசி தமிழ் மற்றும் லங்காசிறி ஊடக குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியின் வளப் பற்றாக்குறை தொடர்பில் ஐ.பி.சி. தமிழ் ஊடகம் வாயிலாக அதன் உண்மை நிலை வெளிக்கொணரப்பட்டிருந்தது.
இதனையடுத்து வெளிநாடுகளில் வசிக்கும் பழைய மாணவர்கள் உள்ளிட்ட புலம்பெயர் தமிழர்கள் வழங்கி வரும் நிதி பங்களிப்பில் மாணவர்களுக்கு தேவையான பல உதவிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.
நிதி உதவி
இந்த நிலையில் இன்றைய தினம் கனடாவிலுள்ள கங்கேஸ் என்ற புலம்பெயர் தமிழரின் 3 இலட்சத்து 12 ஆயிரம் ரூபா நிதி உதவியில் கல்லூரிக்கு தேவையான வர்ணப் பூச்சுக்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து வகுப்பறைகள் உள்ளிட்ட தளபாடங்களுக்கு வர்ணப் பூச்சுக்கள் பூசும் செயற்பாடு மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கல்லூரியின் கூரை ஒன்று இடிந்து விழும் நிலையிலுள்ளதாகவும் அதனை சீர்செய்ய முன்வருமாறு கந்தையா பாஸ்கரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த யோகராசா என்பவர் தனது தாய் தந்தையின் ஞாபகமாக நவீன ரக தையல் இயந்திரம் ஒன்றையும் வழங்கிய நிலையில் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 20 மணி நேரம் முன்

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri
