மகிந்தவின் பிறந்த தினத்தை முன்னிட்டு வசூல் வேட்டை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் 77 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று பாலூட்டும் தாய்மாருக்கு தானம் வழங்குதல் மற்றும் ஆசி வழங்கும் பிரித் ஓதல் என்பன ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அமைச்சர்களிடம் இரண்டு லட்சம் ரூபா வசூல்

இந்த நிகழ்ச்சிக்காக மொட்டுக்கட்சியை சேர்ந்த அமை்சசரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களிடம் தலா இரண்டு லட்சம் ரூபாவும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர்களிடம் தலா ஒரு லட்சம் ரூபாவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களிடம் தலா 50 ஆயிரம் ரூபாவும் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புண்ணியதானத்திற்கு தேவையான பொருட்களை வழங்கும் பொறுப்பு மாகாண மற்றும் பிரதேச சபை மட்ட பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.
மகிந்த ராஜபக்சவின் பிறந்த நாள் நிகழ்வு சம்பந்தமாக கடந்த வாரம் மொட்டுக்கட்சியின் 60 உயர் மட்டப்பிரதிநிதிகள் அழைக்கப்பட்டு கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும் அந்த கூட்டத்தில் 30 பேர் மட்டுமே கலந்துக்கொண்டுள்ளனர். கூட்டத்தில் கலந்துக்கொள்ளாத ஏனையோர் பணத்தை அனுப்பி வைத்திருந்தாக கூறப்படுகிறது.
பிறந்த தின நிகழ்வை மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளர் மற்றும் பிரபல முன்னாள் அமைச்சர் உட்பட சிலர் ஏற்பாடு செய்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri