இலங்கையின் தனியார் துறையுடன் ஒத்துழைப்பதற்கான சாத்தியம் குறித்து அமெரிக்க விண்வெளி நிறுவனம் விவாதம்
இலங்கையின் தனியார் துறையுடன் ஒத்துழைப்பதற்கான சாத்தியம் குறித்து அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய விண்வெளி நிறுவனமான போயிங் அதிகாரிகளுடன் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், கலந்துரையாடினார்.
அமெரிக்கா மற்றும் ஏனைய சர்வதேச நிறுவனங்களுடனான கூட்டாண்மை இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நவீனமயமாக்கலுக்கு முக்கியமாகும்.
இதன் அடிப்படையில், இலங்கையின் தனியார் துறையுடன் ஒத்துழைப்பதற்கான சாத்தியங்கள் குறித்து விவாதிப்பதற்காக அமெரிக்காவை தளமாகக் கொண்ட போயிங் நிறுவனத்தின் மூத்த பிரதிநிதிகளை தாம் நேற்று சந்தித்தாக தூதுவர் டுவிட் செய்துள்ளார்.
ஒரு முன்னணி உலகளாவிய விண்வெளி நிறுவனமாக, போயிங் 150க்கும் மேற்பட்ட
நாடுகளில் வாடிக்கையாளர்களுக்கு வணிக விமானங்கள், பாதுகாப்பு பொருட்கள்
மற்றும் விண்வெளி அமைப்புகளை உருவாக்கி, தயாரித்து மற்றும் சேவை செய்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
