கோவை கார் வெடிப்பு சம்பவம்: விசாரணையில் மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் தகவல்
கோவையில் கடந்த 23ம் திகதி நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை அமைப்பு தனது விசாரணையை தொடங்கியுள்ளது.
விசாரணைகளின் முதல் தகவல் அறிக்கையில், பலியான ஜமீஷா முபினின் வீட்டில் இருந்து ஜிகாத் தொடர்பான புத்தகங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்டுள்ள பொருட்கள்
இதேவேளை ஜமீஷா முபினின் வீட்டில் நடந்த சோதனையில் 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் ரெட் பாஸ்பரஸ் உள்ளிட்ட வேதிப்பொருட்கள், பேட்டரிகள் மற்றும் வயர்கள் உள்ளிட்ட உதிரிபாகங்களும், ஜிகாத் கொள்கைகள் தொடர்பான புத்தகங்களும் கிடைத்துள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு
மேலும் சங்கமேஸ்வரர் கோயில் பூசாரி சுந்தரேசன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், விசாரணை அதிகாரியாக ஆய்வாளர் விக்னேஷ் என்பவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகவும், தேசிய புலனாய்வு முகமையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலானாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
