முல்லைத்தீவு மாவட்டத்தில் வெற்றியளித்த கொக்கோ பயிர்ச்செய்கை
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கோ பயிர் செய்கையானது வெற்றியளித்துள்ளதன் மூலம் பல்வேறு வகையான பெறுமதி சேர் உணவு உற்பத்தி வகைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையைப் பொறுத்த வரையில் கொக்கோ பயிர்ச் செய்கையானது இடை , ஈர வலயங்களில் அதிகளவாக செய்கை பண்ணப்பட்டு வருகின்றது.
கொக்கோ செய்கை
இருப்பினும், உலர் வலயத்திலும் இப்பயிர் செய்கையினை மேற்கொள்ள முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் கொக்கோ செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கொக்கோ பயிர்மூலம் டாக் சொக்லேட் செய்யும் முறை பற்றியும் மாவட்ட விவசாய பயிற்சி நிலைய பண்னை முகாமையாளர் துமிலன் வழிகாட்டலுடனும், முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் யாமினி சசீலன் ஆலோசனையுடனும் , ஒட்டுசுட்டான் விவசாய போதனாசிரியர் அனோதினி சிவனேஸ்வரன் விளக்கமாக கூறியிருக்கின்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |