கோப் குழுவின் புதிய தலைவர் தொடர்பில் எரான் விக்ரமரத்ன வெளியிட்டுள்ள தகவல்
பொது நிறுவனங்கள் தொடர்பான (கோப்) குழுவின்புதிய தலைவராக தனது பெயரை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்துள்ளதை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான எரான் விக்ரமரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏரான் விக்கிரமரத்ன கோப் அமைப்பின் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் பொதுக் கணக்குகள் குழுவின் (கோப) தலைவராகவும் பரிந்துரைக்கப்பட்டதாக வெளியான செய்திகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தீர்மானங்கள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பதவியை வழங்குவது தொடர்பான கொள்கையை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்.
மேலும் இரண்டு குழுக்களிலும் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட அரசாங்கத்தாலேயே இதன் இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும்.
இதேவேளை, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுக்களின் தலைவர்களாக நியமிக்கப்படுவார்கள் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த வாரம் உறுதியளித்திருந்தார்.
எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரான லக்ஷ்மன் கிரியெல்ல
நாடாளுமன்றத்தில் வினவியபோதே சபாநாயகர் இந்த உறுதியை வழங்கியுள்ளார்” என தெரிவித்துள்ளார்.