யாழில் கரைவலை வாடி தீயிட்டு அழிப்பு: கடற்றொழிலாளர்கள் குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் நேற்று(15.02.2026)கரைவலை வாடி தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வடமராட்சி - கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் அமைந்திருக்கின்ற அல்பிரட் என்பவருக்கு சொந்தமான கரைவலை வாடியை நேற்று இரவு இனந்தெரியாதவர்களால் தீவைத்து எரித்துள்ளனர்.
இந்த வருடத்திற்கான கரைவலை தொழில் செய்வதற்கான ஏற்பாடுகள் அப்பகுதியில் இடம் பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், இனந்தெரியாதவர்களால் குறித்த வாடி எரிக்கப்பட்டுள்ளது.
கரைவலை வாடி தீ வைப்பு
வாடி எரிக்கப்பட்ட சமயத்தில் எந்தவிதமான மீன்பிடி உபகரணங்களும் வாடிக்குள் வைக்கப்படாத காரணத்தினால் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கடந்த வருடமும் கடற்றொழிலாளரின் கரைவலை வாடி இனந்தெரியாதவர்களால் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பமும் பதிவாகியிருந்த நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
வீட்டுப் பத்திரம் தர மீனாவிற்கு செக் வைத்த சிந்தாமணி, என்ன செய்யப்போகிறார்?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam