கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர்
கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினான் மற்றும் உதவியாளர் டானியல் பூட் ஆகியோருடனான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர்.
இச்சந்திப்பு கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று நடைபெற்றது.
இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோ. கருணாகரம் (K.Karunakaram), வினோ நோகராதலிங்கம் (Vino Nokarathalingam), மற்றும் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
குறித்த சந்திப்பில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகள், எதிர்கால நடவடிக்கைகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமை பேரவையின் 46/1 பிரேரணைக்கு பிரதான பங்கு வகித்த நாடான கனடாவுடனான தமிழ் தரப்பின் மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இச்சந்திப்பு ஒரு மணி நேரம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |


8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
