புதிய நிலக்கரி டெண்டர் கோரலில் கடுமையாக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்!
லங்கா நிலக்கரி நிறுவனம் 2026-27 ஆம் ஆண்டுக்காக 22 இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கான டெண்டரை கோரியுள்ளது.
இம்முறைக்கான டெண்டர் கோருவதற்கு பூர்த்தி செய்திருக்க கூடிய நிபந்தனைகள் மாற்றப்பட்டுள்ளதோடு அவை கடுமையாக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.
டிரைடன்ட் வெய்மர் (TRIDENT CORPORATION) நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய நிலக்கரி டெண்டர் போன்றதொரு டெண்டர் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக லங்கா நிலக்கரி நிறுவனம் இம்முறை டெண்டர் நிபந்தனைகள் சிலவற்றை மாற்றி அமைத்து கடுமையாக்கியுள்ளது.
கடுமையாக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்
இம்முறை டெண்டரில் தகுதியுள்ள அனைத்து நிலக்கரி விநியோகஸ்தர்களுக்கும் ஏலம் கோருவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை லங்கா நிலக்கரி நிறுவனத்தின் டெண்டர்களுக்கு ஏலம் சமர்ப்பிக்கும் வாய்ப்பு பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு மட்டுமே இருந்தது.
ரும் மே மாதம் 14 ஆம் திகதியுடன் ஏலம் சமர்ப்பித்தல் நிறைவடையும் அதேவேளை இம்முறை பிணை வைப்பு தொகை 700 மில்லியன் ரூபாயாகும்.
இந்த டெண்டர் 38 நிலக்கரி கப்பல்களுக்காக கோரப்பட்டுள்ளதுடன் அவை 210 நாட்களுக்குள் விநியோகிக்கப்பட வேண்டும்.
ஒரு விநியோகஸ்தர் கடந்த 36 மாத காலப்பகுதிக்குள் 20 இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரியை விநியோகித்திருக்க வேண்டும்.
அதில் குறைந்தபட்சம் 10 இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரி 5900 கிலோ கலோரி அளவை விட அதிகமாக இருக்க வேண்டும் என்பதும் அந்த நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த முறை டெண்டரில் ஏலம் கோருவதற்கு ஒரு விநியோகஸ்தர் கடந்த 36 மாத காலப்பகுதியில் 5 இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரியை விநியோகித்திருந்தாலே போதுமானதாக இருந்ததுடன் அதில் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் 5900 கிலோ கலோரி அளவை விட அதிகமாக இருக்க வேண்டியிருந்தது.
கிலோ கலோரி அளவு என்பது நிலக்கரி முழுமையாக எரியும் போது வெளியிடும் மொத்த ஆற்றலாகும். இம்முறை ஏலம் கோருவதற்கான நிபந்தனைகளைக் கடுமையாக்குவதற்காக லங்கா நிலக்கரி நிறுவனம் தீர்மானித்துள்ளது.
உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தின் கொள்முதல் விதிமுறைகளை ஆய்வு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஈஸ்வரியை வைத்து குணசேகரன் போட்ட திட்டம், ஜனனி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam