தமிழர் பகுதியில் விளையாட்டு பயிற்றுநரின் தகாத செயற்பாடு! பொலிஸார் நடவடிக்கை
கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் அத்துமீறல்களுக்குள்ளாக்கிய விளையாட்டு பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளரிடம் கிளிநொச்சி பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.
இன்று சனிக் கிழமை கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் இந்த விடயம் தொடர்பில் தொடர்புகொண்டுள்ளார்.
கடும் அதிருப்தி
குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகள் குறித்து வினவிய போதே கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறார்களின் வாக்குமூலங்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர் இதுவரை சந்தேகநபர் கைது செய்யப்படாமை தொடர்பில் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகின்றது.

சிறுவர்களை பாலியல் அத்துமீறல் செய்தமை என்பது மிகப்பெரிய சமூக அனர்த்தம் ஆனால் இந்த விடயம் தொடர்பில் சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வோர் அசமந்த போக்கில் இருப்பது பெற்றோர்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்க ஒரு நாளைக்கு நடிகை VJ பார்வதி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam