மாகாண கூட்டுறவு அமைப்பு கோரிக்கை விடுத்தும் போராட்டத்தை கைவிட மறுத்த கிளிநொச்சி கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்கள்
தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிளிநொச்சி பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் அங்கத்தவர்கள் முன்னெடுத்து வரும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை கைவிடுமாறு வட மாகாண கூட்டுறவு மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் கோரிய போதும் ஒரு தீர்வு கிடைக்கும் வரை கைவிடப் போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பனை, தென்னை வளகூட்டுறவுச் சங்கத்தின் இரண்டு அங்கத்தவர்கள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் பகல் வட மாகாண மகளிர் விவகார மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இருவரையும் சந்தித்து போராட்டத்தை கைவிடுமாறும் தாங்கள் இதற்கான தீர்வை பெற்றுத்தருவதாகவும் கூறியிருந்தார்.
இருந்தபோதும் தமது கோரிக்கைக்கான தீர்வு கிடைக்கும் வரை தாங்கள் போராட்டத்தை கைவிட போவதில்லை என்றும், இன்று மாலை 5 மணிக்குள் தனக்கான தீர்வைப் பெற்றுத் தருமாறும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

டிடி வாழ்க்கையில் விதி விளையாடிவிட்டது, மிகப்பெரிய வலி... எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா ஓபன் டாக் Cineulagam
ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri