கிளப் வசந்தவின் கொலை விவகாரம்: பிரதான சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல்
கிளப் வசந்த கொலையின் பிரதான சந்தேகநபரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் இன்று (28) கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இந்த கொலையின் பிரதான சந்தேகநபராக கருதப்படும் துப்பாக்கிச்சூடு நடத்திய அஜித் ரோஹன கடந்த வெள்ளிக்கிழமை தெஹிவளை - கௌடான பிரதேசத்தில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கொலை வழக்கு
இவர் இராணுவத்தின் 14 வது சிங்கப் படைப்பிரிவில் பணிபுரிந்தவர் என்றும், அவர் ஏற்கனவே கொலை வழக்கொன்றில் முன்னதாக கைது செய்யப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri