பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட கிளப் வசந்தவின் பூதவுடல்
அத்துருகிரிய பச்சை குத்தும் நிலையத்தில் வைத்து சுட்டு கொலை செய்யப்பட்ட செல்வந்தர் கிளப் வசந்தவின் பூதவுடல் கொழும்பு (Colombo) பொரளையில் உள்ள ஜயரத்ன மலர்சாலையின் விஐபிக்களுக்கான அஞ்சலி செலுத்தும் இடத்திற்கு இன்று (12) கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை அத்துருகிரியவில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த கிளப் வசந்தவின் பூதவுடல் கொழும்பு - பொரளை ஜயரத்ன மலர்சாலையில் முதலில் வைக்கப்பட்டிருந்தது. .
இந்நிலையில், அவரின் சடலத்தை அங்கு வைக்கக் கூடாது என்றும் அப்படியிருந்தால் மலர்ச்சாலை மீது தாக்குதல் நடத்துவோம் என்றும் வெளிநாட்டிலிருந்து வந்த அழைப்பினூடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்
குறித்த தொலைபேசி அழைப்பானது வெளிநாட்டு இலக்கத்துடன் வந்திருந்த நிலையில் நேற்று அது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பொரளை மலர்சாலைக்கு முன்பாக நேற்று முதல் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, தற்போது கிளப் வசந்தவின் உடல், ஜயரத்ன மலர்சாலையின் வி.வி.ஐ.பிக்களுக்கான அஞ்சலி செலுத்தும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதன்போது, அவரின் உடலை ஏற்றிச் சென்ற வாகனம் அதிவேகத்தில் குறித்த இடத்திற்கு சென்றுள்ளதுடன் பொலிஸாரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam
