நீண்ட காலமாக நண்பிகளான ஒன்றாக வாழ்ந்த பெண்கள் மரணம்
களுத்துறையில் இரண்டு நண்பிகள் தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கஹமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குத்தாரிப்புவ கிராமத்தில் 14 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த இரு நண்பிகள் வீட்டில் ஒன்றாக தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளனர்.
இந்த துயர சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நெருக்கமான தோழி
அப்சரா செவ்வந்தியும் அவரது மிகவும் நெருக்கமான தோழியான லலிதா உபமாலியும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் திருமணமாகாதவர்கள் என்பதுடன் 52 மற்றும் 49 வயதுடையவர்ள் என்பது குறிப்பிடத்தக்கது
உயிரிழந்த லலிதா உபமாலி கேகாலை பிரதேசத்தை சேர்ந்தவராகும். அவர் இந்த வீட்டில் அப்சரா செவ்வந்தியுடன் வாழ்ந்து வருகின்றார்.
இருவரும் சிறந்த தோழிகளாகும். உயிரிழந்த அப்சரா செவ்வந்தியின் பெற்றோர் நேற்று இரவு விகாரைக்கு பூஜைக்காக அழைத்ததாக அவரது தந்தை எட்மண்ட் ஜயசிங்க தெரிவித்தார்.
மரணத்திற்கான காரணம்
எனினும் இருவரும் வராத நிலையில் வீட்டிற்கு சென்று பார்த்த போது இருவரும் அறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தந்தை குறிப்பிட்டுள்ளார்.

மரணத்திற்கான காரணம் வெளியாகாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 20 மணி நேரம் முன்
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri