திருகோணமலை பொது வைத்தியசாலையில் கிளினிக் நோயாளர்கள் அவதி
திருகோணமலை பொது வைத்தியசாலையில் மாதாந்த பொது கிளினிக் நோயாளர்களுக்குத் திகதி வழங்கப்பட்டிருந்த போதிலும் நோயாளர்களைப் பார்வையிடுவதற்கு ஒரே ஒரு வைத்தியர் கடமையில் இருப்பதாகவும் இதனால் நோயாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்துகின்றனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலை கிழக்கு மாகாண சபையின் கீழ் செயற்பட்டு வந்த காலகட்டத்தில் வைத்தியர்கள் அதிகளவில் கடமையிலிருந்தனர்.
ஆனாலும் தற்போது மத்திய அரசாங்கத்திற்குக் கீழ் உள் வாங்கப்பட்டிருந்தபோதிலும் வைத்தியர்கள் குறைந்த அளவில் காணப்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
பொது கிளினிக் மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்காகக் காலை 7 மணிக்கு வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த போதிலும் மூன்று மணி வரைக்கும் ஒரே ஒரு வைத்தியர் கடமையிலிருந்ததாகவும் நோயாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாகத் திருகோணமலை பொது வைத்தியசாலை நிர்வாகத்திடம் நோயாளர்கள் சென்று முறையிட்ட போதிலும் நோயாளர்களின் பேச்சி செவிமடுக்கவில்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.
ஆகவே இனிவரும் காலங்களிலாவது நோயாளர்களின் நலன் கருதி நோயாளர்களின் வருகை
தொகையைக் கவனத்தில் கொண்டு வைத்தியர்களை மேலதிகமாக நியமிக்க வேண்டும் எனவும்
நோயாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri