அடுத்த சில நாட்களுக்கு வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை
புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மத்திய , சப்ரகமுவ , மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் குருநாகல் மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பலத்த காற்று
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் தென்கிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 17 நிமிடங்கள் முன்

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam
