சீரான வானிலை நிலவும்! வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு
நாட்டின் பல பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரம், மட்டக்களப்பு,யாழ்ப்பாணம்,மன்னார் போன்ற பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, காலி, கண்டி,நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் அடிக்கடி மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மழை அல்லது இடியுடன் கூடிய மழை
மேலும் திருகோணமலை மாவட்டத்தில் பி.ப 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்குப் பகுதிகளிலும் வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri