நாட்டின் சில பகுதிகளில் இன்றையதினம் இடியுடன் கூடிய மழை!
நாட்டின் சில பகுதிகளில் இன்றையதினம் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை
சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.
பலத்த காற்று
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
![பிக்பாஸ் 8 நிகழ்ச்சி முடிந்தது, பிக்பாஸ் Ultimate பற்றிய அறிவிப்பு வந்தது... தொகுப்பாளர் யார் தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/d2a2c1da-aec5-45f4-a6e5-a525fb131a6b/25-67908bbfd5b64-sm.webp)
பிக்பாஸ் 8 நிகழ்ச்சி முடிந்தது, பிக்பாஸ் Ultimate பற்றிய அறிவிப்பு வந்தது... தொகுப்பாளர் யார் தெரியுமா? Cineulagam
![பிக்பாஸ் 8 சீசனை முடித்த கையோடு தனது பேவரெட் போட்டியாளரை சந்தித்த முத்துக்குமரன்... யாரை தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/618f7b65-20b1-43a2-ab87-e96f9c7bfd41/25-679069dac39c7-sm.webp)
பிக்பாஸ் 8 சீசனை முடித்த கையோடு தனது பேவரெட் போட்டியாளரை சந்தித்த முத்துக்குமரன்... யாரை தெரியுமா? Cineulagam
![கோட் இயக்குநர் வெங்கட் பிரபுவின் மனைவி, மகள்களை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்](https://cdn.ibcstack.com/article/dc53f453-b89e-47ac-9fc5-b4de55ec0111/25-6790b5429f4f5-sm.webp)