யாழில் கடும் காற்றினால் பறந்த குடியிருப்பின் கூரைகள்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
யாழ்ப்பாணத்தில் அசாதாரண காலநிலை நிலவிவரும் நிலையில் குடியிருப்பொன்றின் கூரைகள் வீசிய கடும் காற்றினால் தூக்கி எறியப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் இன்று (21.08.2024) இடம்பெற்றுள்ளது.
பொதுமக்களுக்கான கோரிக்கை
இதன்போது, யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலுக்கு அருகாமையில் இருந்த தொடர் மாடி குடியிருப்பின் கூரைகளே காற்றினால் தூக்கி எறியப்பட்டுள்ளன.
இதனால் குடியிருப்பு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட புலோலி மேற்கு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட நாகதம்பிரான் கோவில் மீது பனைமரம் முறிந்து விழுந்ததில் கோவில் முற்றாக சேதமடைந்துள்ளது.
இந்நிலையில், நிலவும் சீரற்ற காலநிலையினால் பொதுமக்கள் எச்சரிக்கையும் செயற்படுமாறு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலதிக தகவல் - தீபன்