பருத்தித்துறையில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் துப்புரவு பணி
வடமராட்சி பருத்தித்துறையில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத் தூபி பகுதியில் நேற்று (21) துப்புரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 'திலீபன் வழியில் வருகிறோம்' என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனி நாளைய தினம் வடமராட்சி பகுதிக்கு வரவிருக்கின்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் பகுதியில் இருந்து வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்துடன் குறித்த ஊர்தி பவனி வருகின்றது.
இந்நிலையில் வடமராட்சி பருத்தித்துறையில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத் தூபி பகுதியில் இன்று(21) துப்புரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் ஏற்பாட்டில் இந்த பணி முன்னெடுக்கப்பட்டது.





