மட்டக்களப்பில் மாவீரர் துயிலும் இல்லங்கள் துப்பரவு பணி ஆரம்பித்து வைப்பு
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவு செய்யும் நடவடிக்கையினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஆதரவாளர்கள் ஆரம்பித்துள்ளனர்.
குறித்த துப்பரவு பணி நேற்று வெள்ளிக்கிழமை (01.11.2024) தொடங்கியுள்ளது.
எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் நாளையிட்டு மட்டக்களப்பிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை துப்பரவு செய்யும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக இந்த பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
துப்பரவு செய்யும் பணி
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தினை துப்பரவு செய்யும் பணியை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, மாவட்டத்தில் வாகரைகண்டலடி, தரவை, தாண்டியடி, மாவடிமுன்மாரி ஆகிய
நான்கு மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam