நுவரெலியாவில் மீண்டும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பம்
கிளீன் ஸ்ரீலங்கா (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டத்திற்கு இணங்க நுவரெலியாவில் மரக்கன்று நடுதல் மற்றும் சுற்றுச் சூழல் தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு (05) வியாழக்கிழமை மீண்டும் ஆரம்பமாகின.
அதன் முதற்கட்டத்தின் நுவரெலியாவில் தற்போது அதிக அளவில் சுற்றுலா பயணிகள் படையெடுக்கும் கிரகரி வாவி கரையோரத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
மர நடுகை
இதன்போது சுற்றுச்சூழல் சுத்தப்படுத்தப்பட்டு மர நடுகை வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா மாநகரசபை, நுவரெலியா பொலிஸார், வனஜீவராசிகள் திணைக்களம், நுவரெலியா நகர சபை வேட்பாளர்கள், நுவரெலியாவில் பிரசித்திப்பெற்ற சில தனியார் ஹோட்டல் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பலரும் இந்த வேலைத் திட்டத்துடன் கைகோர்த்துக் கொண்டனர்.
நுவரெலியாவில் நகர வன வளத்தை பாதுகாத்து உருவாக்குவதன் ஊடாக சுற்றாடல் பிரச்சினைகள் குறைவது மாத்திரமன்றி சுற்றாடல் அழகாகும் என்பதாலும் கிரகரி வாவியின் நீரின் தரத்தை பாதுகாக்க வேண்டியும் கிரகரி வாவியில் குறித்த வேலைத்திட்டம் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.






