கிளீன் சிறிலங்கா செயற்றிட்டம் - மன்னார் மாவட்டத்திற்கான நிகழ்வு
'சூழல் உணர்வு மிக்க சமூக பொறுப்புணர்வுடன் கூடிய கல்வி சுற்றாடலை நிர்மாணித்தல்' என்ற தொனிப்பொருளில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு நாடு பூராகவும் நேற்று (9) பாடசாலைகளில் 'கிளீன் சிறிலங்கா' செயற்றிட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்திற்கான நிகழ்வு மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அடம்பன் மத்திய கல்லூரியில் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வு ஆரம்பம்
கல்லூரியின் அதிபர் தலைமையில் 541 படைப்பிரிவின் கட்டளை தளபதி தேசியக் கொடி ஏற்றிய நிலையில், நிகழ்வு ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து பாடசாலை மற்றும் சுற்றுச்சூழல் பகுதிகளில் இராணுவத்தினர் இணைந்து சிரமதான பணியை முன்னெடுத்தனர்.
நுளம்பு பெருகும் இடங்கள் அடையாளம்
குறிப்பாக அங்கு நுளம்பு பெருகும் இடங்களும் அடையாளம் காணப்பட்டு சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சிரமதான நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தேசிய வேலைத்திட்டமாக முன்னெடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.


