இராணுவத்தினரால் குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் கிளீன் ஸ்ரீலங்கா திட்டம்
திருகோணமலை - குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இராணுவத்தினரால் சுத்தம் செய்யும் சிரமதான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை நேற்றைய தினம் (22) இடம்பெற்றிருந்தது.
குச்சவெளி பிரதேச பொலிஸ் நிலையம், பிரதேச சபை மற்றும் ஜங்கில் பீச் ஊழியர்கள் இணைந்து வெளிப்புற சுத்தத்தை மேற்கொண்டனர்.

கழிவுப் பொருட்கள் சுத்தப்படுத்தல்
இதில் பிளாஸ்டிக் பொருட்கள், கடதாசி என கழிவுப் பொருட்கள் சுத்தம் செய்யப்பட்டு சூழலை பாதுகாக்கும் நோக்கில் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து அகற்றப்பட்டது.
இதில் குசுசவெளி பிரதேச சபை உறுப்பினர் றஹ்மான் யூசுப், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, இராணுவப் படை அதிகாரிகள், வைத்தியசாலையின் ஊழியர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri