க்ளீன் ஶ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ''க்ளீன் ஶ்ரீலங்கா" தேசிய வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், தற்போது அதற்கான முதற்கட்ட நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதிய வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கவுள்ள முதல் நாளான இன்று (01) அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறவுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சின் செயலாளரின் ஊடாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு, அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டவாக்க பேரவை தலைவர்களுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய வருடத்தில் “க்ளீன் ஶ்ரீலங்கா” (தூய்மையான இலங்கை) தேசிய வேலைத்திட்டத்துடன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், அரச துறை மற்றும் தனியார் துறையினரால் முன்னெடுக்கப்படும் “க்ளீன் ஶ்ரீலங்கா” (தூய்மையான இலங்கை) வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (1) ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam