ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மே இடையே சிறைச்சாலைக்குள் மோதல்.!
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர்களான நந்துன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் 'ஹரக் கட்டா' மற்றும் மந்தினு பத்மசிறி பெரேரா எனப்படும் 'கெஹெல்பத்தர பத்மே' ஆகியோருக்கு இடையே மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 'கெஹெல்பத்தர பத்மே' சிறு காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாக சிறைச்சாலை வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
தற்போதைய மோதலுக்கான காரணம்
அதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த இருவருக்கும் நீண்ட காலமாக போதைப்பொருள் வர்த்தக போட்டி இருந்து வந்துள்ளது.
எனினும் தற்போதைய மோதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.