வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கைகலப்பு: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கைகலப்பில் ஒருவர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு மாகாண ஆளுநரின் யாழில் உள்ள தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவருக்கும் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் ஒருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பொலிஸாரின் அறிவுறுத்தல்
இதன்போது வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் சுத்திகரிப்புப் பணியாளர் அலுவலக பணியாளரை தாக்கியுள்ளார். இதன் காரணமாக அலுவலகப் பணியாளர் காயமடைந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட ஆளுநர் செயலக பணியாளர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்ட பின்னர், பொலிஸாரின் அறிவுறுத்தல் பிரகாரம் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri