விகாரையில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் மோதல்: ஐவர் படுகாயம்
திருகோணமலை - கோமரங்கடவல பகுதியில் இடம் பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (08.09.2023) அதிகாலை இடம் பெற்றுள்ளது.
கோமரங்கடவல திரியாய் சந்தியில் உள்ள விகாரையொன்றில் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மோதல் தொடர்பில் விசாரணை
இசை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சென்ற மொறவெவ -மயிலகுடாவ பகுதியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஐவர் காயமடைந்த நிலையில் நான்கு பேர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மஹதிவுல்வெவ மற்றும் - கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களை மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இதே வேளை குறித்த மோதலில் காயம் அடைந்த 19 வயதுடைய யுவதி மஹதிவுல்வெவ பிரதேச
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார்
தெரிவித்தனர்.
இதன் போது 42, 40 மற்றும் 19 ,23 வயதுடையவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
குறித்த மோதல் தொடர்பில் விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
