பொது நிதிக் குழுவின் தலைவர் பதவிக்காக மோதல்: ஏற்படுத்தியுள்ள புதிய திருப்பம்
நாடாளுமன்ற பொது நிதிக் குழுவின் தலைவர் பதவிக்கான மோதல், புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவை, பொது நிதிக் குழுவுக்கு தற்காலிக தலைவராக நியமித்த நிலையிலேயே இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய நியமனம், நிலையியற் கட்டளைகளை மீறுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.

நிதிக் குழுவின் தலைவர் பதவி
தற்காலிக அடிப்படையில் தலைவர் நியமனம் என்பது, குழுவை பொறுத்த வரை நடைமுறையில் இல்லை என ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
வஜிர அபேவர்தனவை பொது நிதிக் குழுவின் தலைவராக நியமித்தமை நிலையியற் கட்டளைகளை மீறும் செயலாகும்.

இறுதி முடிவு
குழுவுக்கான தலைவர் எதிர்க்கட்சியில் இருந்து வர வேண்டும். கூறப்பட்ட உத்தரவுகளின்படி அந்த பதவிக்கு பதில் தலைவர் ஒருவரை நியமிக்க எந்த ஏற்பாடும் இல்லை என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நிதிக்குழு தலைவர் பதவி தொடர்பான இறுதி முடிவு 2023 மார்ச் 7ஆம் திகதி எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan