இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல்: இருவர் வைத்தியசாலையில் அனுமதி
லுணுகலை கல்லு குதத்தை ஏலத்தில் பெற வந்த இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
லுணுகலை நகரில் உள்ள கல்குவாரி இன்றைய தினம் ஏலத்தில் விடப்பட இருந்த நிலையில் குருணாகலை மற்றும் பதுளை பகுதியில் உள்ள இரண்டு குழுக்கள் குறித்த கல்குவாரியை ஏலத்தில் பெறுவதற்கு முற்பட்ட போது இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.
அத்துடன் வாகனம் ஒன்றின் பின்பகுதியில் உள்ள கண்ணாடி அடித்து சேதமாக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் விசாரணை
காயமடைந்த இருவர் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 20 மணி நேரம் முன்
2016ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த கொடி, காஷ்மோரா.. மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam