தெற்கு அதிவேக வீதியில் விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதி
தெற்கு அதிவேக வீதியில் பத்தேகம அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் 9 ஆவது கிமீ 80 தூண்களுக்கு இடையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் விசேட வைத்தியர் ஒருவரின் மனைவி மற்றும் இரு பிள்ளைகள் பயணித்த காரே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
இவ்வாறு காயமடைந்தவர்களில் 16-21 வயதுடைய இரண்டு மகன்களும், மனைவியும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸார் விசாரணை
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி வந்த கார் மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு தனியார் பேருந்தின் வலது பக்கத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தின் போது 21 வயது மகன் காரை செலுத்தி சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காயமடைந்தவர்களை வீதியில் பயணித்த வாகனங்களின் சாரதிகள் கராப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இதற்கமைய, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
