மட்டக்களப்பில் இரு குழுக்களுக்கிடையே மோதல்
மட்டக்களப்பு (Batticaloa) - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள புனானை ஜெயந்தியாலை பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த மோதல் சம்பவம் நேற்று (11.05.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோதல் சம்பவம்
குறித்த பகுதியைச் சேர்ந்த இருவர் சம்பவதினமான நேற்று (11) மாலை முச்சக்கர வண்டியில் பிரயாணித்துள்ளனர்.
இதன்போது, அங்கு மோட்டர் சைக்கிளில் பிரயாணித்த 23 வயதுடைய இளைஞன் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து இளைஞன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இளைஞன் அங்கிருந்து தப்பி ஓடி அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் புகுந்துள்ளார்.
இந்நிலையில், அந்த இளைஞனை வெளியேவருமாறு முச்சக்கரவண்டியில் சென்ற இருவரும் ஹோட்டல் மீது தாக்குதல் நடாத்தியதையடுத்து வெளியே வந்த இளைஞனுக்கும் அந்த இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
மோதலில், இளைஞன் தாக்கியதில் முச்சக்கர வண்டியில் பிரயாணித்த இருவரும் படுகாயமடைந்ததை தொடர்ந்து தப்பி ஓடிய இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பலத்த பாதுகாப்பு நடவடிக்கை
இந்த மோதலில் படுகாயமடைந்த 47 மற்றும் 45 வயதுடைய இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும், பதற்ற நிலையை தடுப்பதற்காக விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் வரவழைக்கப்பட்டு பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம்: புலம்பெயர்தல் மீது ஏற்படுத்தவிருக்கும் தாக்கம் News Lankasri

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
