மஹிந்த - பசிலுக்கு இடையில் தீவிர பதவி மோதல்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினராக வர்த்தகமானியில் பெயரிடப்பட்டுள்ள பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் அமைச்சுக்கான மோதல் தீவிரம் அடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகி அமைச்சர் பதவியை பெறவுள்ள நிலையில் ராஜபக்ச குடும்பத்திற்குள் மோதல் வெடித்துள்ளது என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.
பசில் நிதியமைச்சை கோரியுள்ளார் எனினும் பிரதமர் அதனை ஏற்க மறுத்துள்ளார் என அரசியல்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமரும் அவரது குடும்பத்தினரும் நிதியமைச்சை பசிலுக்கு வழங்குவதற்கு மறுத்துள்ளனர் என அரசியல்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாளையதினம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ள பசில் ராஜபக்சவிற்கு ஜனாதிபதி உடனடியாக அமைச்சர் பதவியை வழங்கவுள்ளார். ஆனால் பசில் ராஜபக்ச நிதியமைச்சர் பதவியை அல்லது அதற்கு சமமான பதவியை கோரியுள்ளார், இதன் காரணமாக அவருக்கு என்ன அமைச்சினை வழங்குவது என முடிவாகவில்லை .
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன - விரைவில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளதாக டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.
பசில் ராஜபக்சவிற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பதவியை வழங்குவது குறித்து ஆராயப்படுகின்றது.
கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் பசில் ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.