காணிகளை சுவீகரிக்கும் சந்தர்ப்பத்தில் பொறிமுறையை மேற்கொள்வது தொடர்பில் தெளிவூட்டும் செயலமர்வு (Photos)
அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த காணிகளை சுவீகரிக்கும் சந்தர்ப்பத்தில் அந்த பொறிமுறையை எவ்வாறு மேற்கொள்வது தொடர்பான தெளிவூட்டும் செயலமர்வு இன்று(20) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
அரசாங்கம் நாட்டினுடைய பொருளாதார அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வகையான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
குறித்த திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற சந்தர்ப்பத்தில் அரச காணிகளுக்கு மேலதிகமாக தனியார் காணிகளையும் சுவீகரிக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது.
எனவே இவ்வாறான சந்தர்ப்பத்தில் காணி சுவீகரிப்பை கிரமமான முறையில் மேற்கொண்டு அபிவிருத்தித் திட்டங்களுக்காக காணிகளை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பில் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.
காணி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தெளிவூட்டல் செயலமர்வு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மேற்கொள்ளப்பட்டமை விசேட அம்சமாகும்.
கிழக்கு மாகாணத்தில் காணி சுவீகரிப்பு தொடர்பான பிரச்சினைகள் அமைச்சுக்கு அதிகப்படியாக வருவதனால் இவ்வாறான ஒரு செயலமர்வை திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்வதற்கு தீர்மானித்ததாக காணி அமைச்சின் பணிப்பாளர்(காணி சுவீகரித்தல்)ரத்னா ரணசிங்க தெரிவித்தார்.
இந்நிகழ்வில், சிங்கள மொழி மூலமான முன்வைப்புக்களை உதவி பணிப்பாளர்( காணி சுவீகரித்தல்) கோகிலா ஹேமச்சந்திவும் , தமிழ் மொழி மூலமான முன்வைப்புக்களை உதவிப்பணிப்பாளர் ( காணி சுவீகரித்தல்) எம். பார்த்தீபனும் தெளிவுபடுத்தியுள்ளனர்.











புலம்பெயர்ந்தோர் மீது பழி சுமத்துவதை நிறுத்துங்கள்... உள்துறைச் செயலருக்கு 105 தொண்டு நிறுவனங்கள் கடிதம் News Lankasri
