யாழில் வாக்களிக்கும் முறைமை பற்றி அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு
தபால் மூலம் வாக்களிக்கவுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு வாக்களிக்கும் முறைமை தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கான செயலமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த செயலம்ர்வானது, நேற்றைய தினம் (25.10.2024) யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, ஒவ்வொரு திணைக்களங்களையும் சேர்ந்த பதவிநிலை உத்தியோகத்தர் ஒவ்வொருவருக்கும் வாக்களிக்கும் முறைமை தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தெளிவுபடுத்தல்
இந்த கூட்டத்தில் தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது செல்லுபடியற்ற வாக்குகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகமாக காணப்பட்டதாகவும் மாவட்ட ரீதியில் இந்த எண்ணிக்கையினை குறைக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதால், இத்தெளிவூட்டலை சரியாகப் பெற்று ஒவ்வொருவரும் தான் சார்ந்த திணைக்களத்தில் கடமையாற்றுகின்ற சகல உத்தியோகத்தர்களையும் அழைத்து தெளிவுபடுத்துமாறு தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்களுக்கான வாக்களிப்பு முறைமை பற்றிய தெளிவுபடுத்தலானது பிரதேச செயலக ரீதியாக பிரதேச செயலர்களின் வழிகாட்டுதலில் உதவிப் பிரதேச செயலாளர், நிர்வாக கிராம அலுவலர் தலைமையில் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மூலம் கிராமங்களில் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவத்தாட்சி அலுவலர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வாக்களிப்பு முறைமை பற்றி உதவித் தேர்தல் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ் விளக்கமளித்துள்ளதுடன் காணொளி மூலமும் காட்சிப்படுத்தி விளக்கமளிக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri
