வவுனியாவில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கை தொடர்பில் மகிந்த தேசப்பிரிய விளக்கம் (Photos)
நாட்டின் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கை தொடர்பாக முன்னாள் தேர்தல் ஆணைக்குழுத் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மகிந்த தேசப்பிரியவால் இளைஞர், யுவதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு வவுனியா, தவசிகுளம் பகுதியிலுள்ள அப்ரியல் அமைப்பின் மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் (15.02.2023) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, உள்ளுராட்சி தேர்தலின் நடைமுறைகள், வேட்பாளர்களின் செயற்பாடுகள், தேர்தல் முறைகேடுகளை அவதானிக்கும் வழிமுறைகள், சமூக ஊடகங்கள் ஊடான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள், அரச சொத்துக்களைப் பயன்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன், இளைஞர், யுவதிகளின் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டுள்ளது.
இதில் அப்ரியல் அமைப்பின் இயக்குநர், இயக்குநர் சபை உறுப்பினர்கள், அப்ரியல்
அமைப்பின் ஏற்பாட்டின் கீழ் தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சி (வியூ)
அமைப்பின் பல்வேறு மாவட்டங்களுக்குமுரிய கண்காணிப்பாளர்கள் எனப் பலரும் கலந்து
கொண்டமை குறிப்பிடத்தக்கது.












அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
