மயிலிட்டியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட பொதுமக்கள்
யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் இன்று(01.09.2025) காலை ஒன்றுகூடிய காணி உரிமையாளர்களையும் அதனை செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக விரட்டியடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலிட்டி கடற்றொழில் துறைமுகம் பகுதியில் அபிவிருத்தி பணிக்கான அடிக்கல்லை நாட்டுவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வருகைதந்திருந்தார்.
இதன்போது, அப்பகுதியில் கூடிய காணி உரிமையாளர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரும் அப்பகுதியில் நிற்க விடாமல் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
கடும் பாதுகாப்பு
அத்துடன், வயோதிபர்கள் எனவும் பாராது போராட்டக்காரர்களை பொலிஸார் தகாத வார்த்தைகளை பேசி முதுகில் பிடித்து தள்ளியுள்ளனர்.
கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மயிலிட்டிக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



அந்த குழந்தையா இது!! சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்தவர் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க! சமீபத்திய புகைப்படம்.. Cineulagam
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri