யாழில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் காணப்படும் 7 கோயில்களுக்கு செல்ல அனுமதி
யாழ்ப்பாணத்தில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் காணப்படும் ஏழு கோயில்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவம் இந்த அனுமதியை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாண பாதுகாப்பு தலைமையகத்திற்கு அருகாமையில் காணப்படும் ஏழு கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்ய இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோயில்களின் விபரம்
கடுவான் முத்துமாரியம்மன் கோயில், விசாவிலன் சிவன் கோயில், வாசவிலன் நாக கோயில், வாசவிலன் மனம்பிறய் கோயில், பளை ராஜராஜேஸ்வரி கோயில், பளை நாக தம்பிலான் கோயில், பளை சக்திவேல் முருகன் ஆலயம் என்பனவற்றில் வாராந்த பூஜை வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோயில்களின் அறங்காவலர்களினால் விடுக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோயில்களில் மாதாந்த மற்றும் விசேட பூஜை வழிபாடுகளுக்கு மட்டுமே முன்னதாக அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
