எரிபொருள் நெருக்கடியால் பணிக்கு செல்லாத இலட்சக்கணக்கான அரச ஊழியர்கள்
எரிபொருள் நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து பிரச்சினையால் சுமார் 10 வீதமான அரச ஊழியர்கள் நேற்று கடமைக்கு சமூகமளிக்கவில்லை என அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முழுமையான அரச ஊழியர்களில் 15 லட்சம் பேரில் ஒன்றரை லட்சம் பேர் பணிக்கு வரவில்லை என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் புகையிரத சேவைகள் வழமை போன்று இயங்குகின்றன, ஆனால் 18,000 தனியார் பேருந்துகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நேற்று இயக்கப்பட்டது.
அலுவலகப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும் பேருந்துகளும் எரிபொருள் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதால், அரச உத்தியோகத்தர்கள் கடமைக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடி காரணமாக வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் பணிக்கு அரச ஊழியர்களை மீள அழைப்பது தொடர்பில் கடந்த 21ஆம் திகதி தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில் கலந்துரையாடப்பட்ட போதிலும் இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

அதிரவைக்கும் பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம் News Lankasri

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan
