அரச சேவையில் சேர்க்கப்படும் ஊழியர்கள் தொடர்பில் வெளியான விசேட சுற்றறிக்கை
அரச நிறுவனங்களில் தற்போது தற்காலிக மற்றும் தினசரி ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்காக நிரந்தர நியமனங்கள் வழங்கும் செயல்முறை தொடர்பில் புதிய சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் நேற்று ( 3) இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
நிரந்தர நியமனங்கள் பெற ஒப்புதல்
இந்த சுற்றறிக்கையை அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசியலமைப்பு சபைகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக சமீபத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ச. நளிந்த ஜயதிஸ்ஸ சுமார் 9,800 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் பெற ஒப்புதல் அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த சுற்றறிக்கை குறித்த ஊழியர்களுக்கு உரிய வழிமுறைகளின் படி நியமனங்கள் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

