அரச ஊழியர்களில் ஒரு தரப்பினருக்கான விடுமுறை குறித்து வெளியான புதிய அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதி முதல்வர்களாக, உப தவிசாளர்களாக தெரிவு செய்யப்படும் அரச உத்தியோகத்தர்களுக்கான விடுமுறை விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த திருத்தங்களை மேற்கொண்டு அரச நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் 22ஆம் திகதியன்று அமைச்சரவையால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
வழங்கப்பட்டுள்ள வசதி
இதன்படி, குறித்த பதவிகளை வகிக்கும் தகுதியுடைய அரச உத்தியோகத்தர்கள் மாதம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 6 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அல்லது குறித்த பதவியில் இருக்கும் காலப்பகுதியில், தேவைப்படின் ஊதியமற்ற விடுமுறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதியும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றப் பணிகளை மேற்கொள்வதற்காக அரச உத்தியோகத்தர்களுக்குத் தேவையான நெகிழ்வுத்தன்மையை வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
"I am coming".. பல தடைகளை தாண்டி வெளியாகும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. Cineulagam