மக்களே அவதானம்! காலநிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று முதல் மழை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதற்கமைய பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டு மக்களுக்கு நேற்று வரை கடுமையான வெப்பம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இன்று காலநிலையின் திடீர் மாற்றத்தால் சில பகுதிகளில் மழைவீச்சிக்கு அதிக வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மழைவீழ்ச்சி
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |