கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட சீனப்பெண்.. காதலன் குறித்து சிஐடி வெளியிட்டுள்ள அவசர தகவல்
கொழும்பு - கொழுவலைப் பகுதியில் உள்ள வீடமைப்புத் தொகுதி ஒன்றில் வசித்து வந்த சீனப் பெண் ஒருவர் கடந்த மார்ச் 23ஆம் திகதி மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கல்கிசைப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபராக உயிரிழந்த பெண்ணின் முன்னாள் காதலர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தொடர்பு கொள்ளுங்கள்..
அவரும் ஒரு சீனப் பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவரை கைது செய்ய பொலிஸார் தற்போது பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

பெயர்: வாங் ஹுயுயின் (Wang Huiyin)
பிறந்த திகதி: 2000 ஜூன் 01
கடவுச்சீட்டு இலக்கங்கள்: EE6791329 / ER3805969
அடையாளம்: சந்தேக நபரின் இடது கையில் தையல் போடப்பட்ட காயத் தழும்பு உள்ளது.
தொடர்புகொள்ள வேண்டிய இலக்கங்கள் -
குறித்த நபர் தொடர்பான ஏதேனும் தகவல்கள் கிடைத்தால், உடனடியாகப் பின்வரும் இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கல்கிசைப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு (OIC): 071-8596408
கொழுவலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC): 071-8591669
குற்றவாளியைக் கண்டுபிடித்து நீதியை நிலைநாட்ட சட்ட அமலாக்கத் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.