ஜனாதிபதியின் வீடு எரிக்கப்பட்ட சம்பவம்: ரவூப் ஹக்கீமிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை-செய்திகளின் தொகுப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
ரவூப் ஹக்கீமிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று சுமார் 07 மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.
ரவூப் ஹக்கீம் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த விசாரணைகள் இடம்பெற்றதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவின் சகோதரியிடம் விசாரணை
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீடு எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரி துலாஞ்சலி பிரேமதாச நேற்று முற்பகல் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவாக தகவல்களுடன் வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
