ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு சென்ற CID அதிகாரிகள் - வெளியான காரணம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வெளிநாட்டுப்பயணம் தொடர்பாகவே மைத்ரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வுத்துறை (சிஐடி) நேற்று வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு சென்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று (24) வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தனர்.
நிதியை செலவழித்து தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ரூ. 1.66 பில்லியன் பொது நிதியைச் செலவழித்து மேற்கொண்ட தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணம் தொடர்பாகவே விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் (24) கொழும்பு 03, ஐந்தாம் தளத்தில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற சிஐடி அதிகாரிகள் குழு, மைத்ரி விக்ரமசிங்கவிடமிருந்து இந்த வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது.
அவரது உடல்நிலை குறித்து அவரது வழக்கறிஞர்கள் விடுத்த கோரிக்கையின் பேரில், இல்லத்தில் வைத்து இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீண்டும் விசாரணை
தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணத்திற்காக ரூ. 1.66 பில்லியன் பொது நிதியைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சிஐடி வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு, புதன்கிழமை, 29ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரவு முழுவதும் விடிய விடிய கதறி அழுதுள்ள எதிர்நீச்சல் சீரியல் புகழ் ஹரிப்பிரியா... அப்படி என்ன நடந்தது? Cineulagam