கதிர்காமம் விகாராதிபதியை 7 மணி நேரம் விசாரணை செய்த சி.ஐ.டி.
கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கதிர்காமத்தில் கட்டப்பட்டுள்ள வீடு ஒன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குச்(Mahinda Rajapaksa) சொந்தமானது எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகக் கொபவக்க தம்மிந்த தேரர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முன்னிலையாகியிருந்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
இதன்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரரிடம் இருந்து 7 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

வாக்குமூலம் வழங்கிய பின்னர் கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர நேற்று திங்கட்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 2 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri