யாழ். பல்கலைக்கழக மாணவனிடம் சி.ஐ.டி 3 மணி நேர விசாரணை - செய்திகளின் தொகுப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனும் கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் உப தலைவருமான இராசரத்தினம் தர்சனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுத்தபோது விடுதலைப்புலிகளின் பாடல் இசைக்கபட்டமை மற்றும் மாணவர் ஒன்றிய செயற்பாடுகள், வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாடுகள் தொடர்பிலேயே விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நேற்று திங்கட்கிழமை சுமார் 3 மணித்தியாலத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது. இ.தர்சன் யாழ்ப்பாணத்தில் இயங்கும் பத்திரிகை ஒன்றில் ஊடகவியாளராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 13 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan